Rs 108.00 Rs 120.00
Brand: Salamath Pathippakam
Product Code: SP01319
Availability: In Stock
Language:
Tamil
Type:
Nonbu

நடைமுறை வாழ்வில் உள்ள உண்ணுதல், பருகுதல், தாம்பத்திய உறவு கொள்ளுதல் போன்ற அன்றாடச் செயல்களை பகல் காலங்களில் இறைவனுக்காகத்

 தவிர்த்துக் கொள்வதே நோன்பு எனப்படுகிறது.

இறைவனுக்காகத் தடுத்துக்கொள்ளும் இச்செயல்களில் நமக்கும் பலனுண்டு. ஆம், ஒரு மாத காலம் பகற்காலங்களில் உணவு உட்கொள்ளாததால் உடலுறுப்புகள் சுத்திகரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஏதேனும் நோய் இருந்தாலும் நோன்பு அதற்கு அருமருந்தாக அமைந்து விடுகிறது. 

பதினோரு மாதங்கள் ஓய்வின்றி உணவுகளை அரைத்துக் கொண்டிருந்த எந்திரம் (மிஷின்) ஓய்வு பெறவே ஒரு மாதம் பகற்காலங்களில் உணவையும் தண்ணீரையும் தவிர்க்கிறோம். இதனால் பெருநோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறோம்.

இப்படி பல நன்மைகளை அள்ளித்தருகின்ற நோன்பு குறித்தும், நோன்பின் சட்டங்கள், சிறப்புகள், நோன்பின் வகைகள், வருடம் முழுவதுக்கும் ஸஹர், இஃப்தார் நேரங்கள் என நோன்பு தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.