Rs 315.00 Rs 350.00
Brand: Sajidha
Product Code: 07377
Availability: In Stock
Author:
Ibnul Qayyim (Rah)
Language:
Tamil
Type:
Medicine - Quran Hadith

‘அத்திப்புன் நபவிய்யு’ எனும் பெயரில் வேறு சில அறிஞர்களும் நூல்கள் எழுதியுள்ளனர். எனினும் பேரறிஞர் இப்னுல் கய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) எழுதியுள்ள இந்நூலே புகழ் மிக்கதும் மேற்கோள் காட்டப்படுவதுமாக அறிவுலகில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது.

நாம் வாழும் இக்காலம் எல்லாவற்றிலும் Variety-யை (வகைககளை) விரும்பும் காலமாகிவிட்டது. உணவு, உடை, வாழ்விடம், உரைகள், நூல்கள் என எல்லாவற்றிலும் பலவகைகளைத் தேடி விரும்பிச் செல்கின்றனர். மருத்துவமும் அப்படித்தான். மக்கள் பலவகை மருத்துவங்களை விரும்புகின்றனர். நாட்டு வைத்தியம் மீண்டும் பேசப்படும் பொருளாகிறது. சீன வைத்தியம் பரவலாக பிரபலமாகிவருகிறது. 

ஹிஜாமா(Cupping) ஒருபுறம் பிரபலமாகிவருகிறது. தொடு சிகிச்சை, உணவே மருந்து, யோகா எனப்  பலவகை மருத்துவங்கள் மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சூழலில் ‘நபிவழி மருத்துவம்’ எனும் இந்நூல் வெளிவருவது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.

மூலிகைகள், செடிகள், மருந்துப்பொடிகள் இவற்றின் பெயரை மொழிபெயர்ப்பது மிகக் கடினம். அதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலாசிரியர் சொல்ல விரும்புவதைப் புரிந்து அதை இக்கால வழக்குடன் இணைத்து விளங்கி மொழிபெயர்ப்பது ஒரு கலை. அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மூலநூல் மூன்று பாடங்கள் கொண்டது.

1. நபி (ஸல்) கடைப்பிடித்த மருத்துவம்

2. ஆன்மிக மருத்துவம் (அத்வியத்துர் ரூஹானிய்யா)

3. ஒவ்வொரு பொருளின் மருத்துவப் பண்புகள்.

ஒருவருக்கு வாந்தி வருகிறதென்றால் அதற்குப் பத்துக் காரணங்கள் உண்டு. (பக்கம்:189,190)

யார்? மருத்துவர்? மருத்துவரிடம் இருந்திட வேண்டிய இருபது பண்புகள் (பக்:203,204)

ஜின்களின் பார்வையாலும் கண்திருஷ்டி ஏற்படும் (பக்:235)

கண்ணில்லாதவர் கூட கண்ணேறு ஏற்பட காரணமாவார். (பக்:238)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் தூங்கமாட்டார்கள். (பக்:342)

மக்கள் நீதியோடும், நேர்மையாகவும் வாழ்ந்த காலங்கள் விளைந்த பொருள்கள் பெரிதாக இருந்தன. பேரீத்தம் பழக் கொட்டை அளவுக்கு ஒரு கோதுமை இருந்தது. (பக்:450)

கடல்நீரை நன்னீராக, குடிநீராக மாற்றிட செய்ய வேண்டிய இருவழி முறைகள். (பக்:487)

கலங்கலான நீரைப் பருக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் .(பக்:487)

ஆகிய பகுதிகளை வாசிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. மூல நூலாசிரியரின் ஆழமான மார்க்க ஞானமும் மருத்துவ அறிவும் பக்கத்துக்குப் பக்கம் பிரமிப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.

ஆன்மிக மருத்துவம் குறித்த பாடத்தில் நோய்களுக்கும் அதைத் தீர்க்க ஓத வேண்டிய துஆவிலுள்ள வாசகங்களுக்கும் இடையேயுள்ள நுண்ணிய தொடர்பை விவரிக்கும் பக்கங்கள் (288,289,290) வியப்பூட்டுகின்றன. இந்தப் பக்கங்களை வாசித்து முடித்தவர்கள் அந்த துஆக்களை ஓதும்போது புதிய ஆன்மிக உலகில் தம் மனம் சஞ்சரிப்பதை உணர்வர்.

உடல் நோய்களுக்கு இணையாக மன நோய்களின் அணிவகுப்பும் இன்றைய உலகின் பெரும் அச்சுறுத்தல்.

சக மனிதன் நேசிக்கப்பட வேண்டும். கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். துர்பாக்கியம் என்னவெனில் கருவிகள் நேசத்திற்குரியவையாகிவிட்டன. மனிதன் கருவி போல் பயன்படுத்தப்படுகிறான்.

எனவே மனநோய்கள் பெருகிவிட்டன. உளவியல் படிப்புகள் அதிகரித்துவிட்டன. உளவியல் வல்லுநர்கள் ஏராளமாகிவிட்டனர்.

மனநோய் குறித்து ஆன்மிகம் கலந்த பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.

“மனம் விரும்பியபடி செயல்படுவது நோய்களுள் மிகப் பெரியது. மனவிருப்பத்துக்கு எதிராகச் செயல்படுவதே அதற்கான மிகப்பெரும் மருந்து. மனித ஆன்மா அறிவிலியாகவும் அநியாயம் செய்யக்கூடியதாகவும் படைக்கப்பட்டுள்ளது. அது அறியாமையில் இருப்பதால் மனவிருப்பங்களைப் பின்பற்றுவதில் நிவாரணம் இருப்பதாக எண்ணிக்கொள்கிறது. ஆனால் அதில் அழிவும் இழிவும்தான் உள்ளது. நலம் நாடும் மருத்துவரை விரும்பாது” என்று கூறும் நூலாசிரியர் மனோவியாதிக்கான காரணங்கள் அதைத் தீர்க்கும் வழிகளையும் அருமையாக விளக்குகிறார். (பக்:285,286,287)

நீர் பருகும் ஒழுக்கம், உறங்கும் ஒழுக்கம், உண்ணும் ஒழுக்கம் சேர்த்து உண்ண வேண்டியவை தனித்தனியே உண்ண வேண்டியவை, நறுமணம் பூசுதல் ஆகியவற்றை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி அறிவார்த்தமாக அவற்றை விளக்குகிறது இந்நூல்.

Related Products