Rs 180.00 Rs 200.00
Product Code: 08276
Availability: In Stock
Language:
Tamil
Type:
Dua & Ruqya

நூலைப் பற்றி

குர்ஆன் கூறும் துஆக்களின் தொகுப்பு புத்தகங்கள் நிறைய காண நேர்ந்தாலும் சகோதரி அவர்கள் இந்தத் தொகுப்பைப் படிக்க நேர்ந்த போது எதிர்பாராத ஆச்சரியங்கள் பல காத்திருந்தது வெறுமனே துஆக்களின் தொகுப்பு மட்டுமில்லாமல் அதன் பொருள், எந்த சந்தர்ப்பத்தில் யாரால் கேட்கப்பட்டது. அது சம்பந்தமான மேலதிக விளக்கங்கள், இன்றைய காலத்தோடு தொடர்பு படுத்திய அறிவுரைகள் என்று சகோதரி அவர்கள் ஒரு ஆராய்ச்சி நூல் அளவுக்கு விளக்கமளித்திருப்பதுதான் இந்நூலின் கூடுதல் சிறப்பு

சித்தி லரீஃபா சித்தீக்கிய்யா, MA, MPhil,(PHD) இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர்

இது ஓர் அரிய பணி, பெரிதும் முயன்று உழைத்து பிரார்த்தனை வைரங்களை அழகான மாலை ஆக்கித் தந்துள்ளார் வைரங்கள் இம்மையுடன் சரி. ஆனால் இந்தப் பிரார்த்தனை வைரங்கள் மறுமை வரை உங்கள் கூடவே வரும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், ஆதாரப்பூர்வமான துஆக்கள் - பிரார்த்தனைகள் விரிவுரை நூல் இது எல்லாம் பொதுவாக ஆன்மிக நூல்களைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு விதச் சோர்வு இந்த நூலில் இல்லை

சிராஜுல் ஹஸன், மூத்த பத்திரிகையாளர்.

Tags: Tamil