Rs 54.00 Rs 60.00
Brand: Salamath Pathippakam
Product Code: 06967
Availability: In Stock
author:
Moulavi Abul Hasan Fazil M.A

    எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் அன்பும், அருளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீதும், அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் இறை வணக்கங்களில் பேணிக்கையாக வாழும் முஃமின்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

    இஸ்லாத்தின் பிரபலமான நான்கு சட்டத்துறைகளின் கருத்துக்களையும், அதிலும் குறிப்பாக நமது தமிழகத்தில் பிரபலமான ஹனஃபீ, ஷாஃபீஈ சட்டத்துறைகளின் சட்டக் கருத்துக்களை (அச்சட்டத்துறைகளின்) பல்வேறு நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி கூறியுள்ளேன். சட்டத்துறைகளை ஏற்றவர்களும், அவற்றை ஏற்காதவர்களும் இந்நூலினால் பயன்பெறும் வகையில் சட்டங்களுக்கான ஆதாரங்களை குர்ஆன் மற்றும் சுன்னாவில் இருந்து கூறியுள்ளேன்.

     புகாரீ, முஸ்லிம், திர்மிதீ ஆகியவற்றுக்கு சென்னை ரஹ்மத் பதிப்பக தமிழாக்க வெளியீடுகளின் எண் வரிசையைக் கூறியுள்ளேன். மற்ற நூல்களுக்கு மக்தபா ஷாமிலா பழைய பதிப்பில் இருந்து மேற்கோள்காட்டியுள்ளேன்.

    இஸ்லாம் வழிகாட்டியுள்ள உபரியான அமல்களில் ஒன்றான இஃதிகாஃப், தனி மனிதன் மற்றும் சமூக வாழ்வில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. படைத்த ஏக இறைவனான அல்லாஹ்வுடன் உலகத் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் மனிதனை இது முழுமையாக இணைக்கின்றது. பள்ளிவாசலில் முழு நேரமும் அவனை இருக்க வைத்து, ஒருபுறம் இறைவனின் மகத்தான அருட்கொடைகளை சிந்திக்க வைக்கின்றத மறுபுறம் அவனின் கடந்த கால செயல்பாடுகளின் மீது யோசிக்க வைக்கின்றது. வருடத்தில் “பத்து நாட்கள்” தான் என்றாலும் இதன் தாக்கம் மிக வலிமையானது. புனித ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்படும் இவ்வமல் குறித்து பின்வரும் பக்கங்களில் விரிவாக பார்களாம்


Tags: Tamil