Rs 76.50 Rs 85.00
Brand: Salamath Pathippakam
Product Code: 06371
Availability: In Stock
author:
Moulavi Abul Hasan Fazil M.A

பதிப்புரை

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! சாந்தியும், சமாதானமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக!

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவின் மாபெரும் கிருபையால் குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் சம்பந்தமான நூற்கள் இன்னும் மார்க்க சம்பந்தமான பல நூற்கள் எங்கள் ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்துள்ளதை நன்கு அறிவீர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

பேராசிரியர் மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி அவர்கள் எழுதிய “ஹதீஸ் மறுப்பின் விபரீதங்கள்” என்னும் இந்நூலினை தற்பொழுது வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்நூலில் ஹதீஸ்களை மறுப்பதினால் ஏற்படும் விபரீதங்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது; ஹதீஸ்களை மறுப்போருக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இதை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! நேர்வழி அளிப்பானாக! இன்னும் பல பயன்மிக்க நூல்களை வெளியிடுவதற்கு தாங்கள் அனைவரும் துஆ செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.

ஸலாமத் புக் ஹவுஸ்

சென்னை - 1.


Related Products